CHURCH
Nullam dignissim, ante scelerisque the is euismod fermentum odio sem semper the is erat, a feugiat leo urna eget eros. Duis Aenean a imperdiet risus.
நவநாள் செபம்
எங்கள் அற்புத குழந்தை இயேசுவே! அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து இங்கே காத்திருகின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும். நீரே எங்கள் ஆண்டவர்: நீரே எங்கள் மீட்பர்: எங்களைப்பற்றி உமக்கு_எவ்வளவோ அக்கறை. அந்த அக்கறையினால் தான் எங்கள் மன்றாட்டுகளை கேட்க எங்களோடு இருக்கின்றீர். எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து எங்கள் கோரிக்கைகளை கருணைகூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம். தந்தையோடும், தூய ஆவியோடும் இறைவனாய் என்றைன்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே. ஆமென்.
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக் கண்களைத்
திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து,வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய
இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும்,
வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள்
மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும்,
தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்.
அற்புத குழந்தை இயேசுவே! வானக நம் அன்புத் தந்தையை "அப்பா" என்று வாஞ்சையோடு அழைக்க எங்களுக்கு கற்றுத் கொடுத்தீரே; நாங்களும் உம்மோடு ஒன்று சேர்ந்து அவ்வன்புதந்தைக்கு இத்திருப்பலியை ஒப்பு கொடுக்கின்றோம். அன்பு பலியாக அவருக்கு உம்மை ஒப்பு கொடுக்கின்றோம். உம்மோடு எங்களையும் கூட்டிச் சேர்ந்து அவருக்கு காணிக்கையாக்குகிறோம். எங்களுக்காக மட்டுமல்ல; பரந்த இவ்வுலகில் எல்லா மக்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம்.
இச்செபமாலையின் அமைப்பு திருக்குடும்பத்தின் மகிமைக்காக மூன்று கர்த்தர் கற்பித்த செபம்.நம் மீட்பருடைய
குழந்தைப் பருவத்தின் பன்னிரு ஆண்டுகளின் நினைவாக பன்னிரு மங்கள வார்த்தை செபம். தூய திருத்துவத்தின்
மகிமைக்காக மூன்று திருத்துவ புகழ் செபம்.
ஒவ்வொரு கர்த்தர் கற்பித்த செபத்திற்கு முன்னும் "வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடி கொண்டார்" என்றும்.
ஒவ்வொரு கர்த்தர் கற்பித்த செபத்திற்கு முன்னும் "வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடி கொண்டார்" என்றும்.
01. இறைவனின் மனிதப் பிறப்பு
02. தூய மரியாள் எலிசபெத்தின் சந்திப்பு
03. இயேசுவின் பிறப்பு
04. இடையரின் ஆராதனை
05.விருத்தசேதனம்
06. ஞானிகளின் ஆராதனை
07. இயேசுவின் காணிக்கை
08. எகிப்து நாட்டிற்குப் பயணம்
09. எகிப்தில் தங்குதல்
10. எகிப்திலிருந்து திரும்புதல்
11. நசரேத்தூரில் வாழ்க்கை
12.மறைநூல் மேதைகளுக்கிடையே இயேசு
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
அருள் நிறைந்த மரியே ...
செபம்: குழந்தை இயேசுவே! ஒப்பற்ற உமது வல்லமையை வியத்தகு முறையில் வெளிப்படுத்தி,
உமது அற்புத திருக்கர ஆசீரால் எங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்புகின்றீரே, நம்பிக்கையோடு உம்மைக்
கூவி அழைக்கும் பக்தர்களின் மன்றாட்டுக்களுக்கு கனிவாய் செவிமடுத்தருள தயைபுரியும். ஆமென்.
இச்சிறு செபமாலைப் பக்தி தமக்கு எவ்வளவு பிரியமானது என்பதை தூய மார்கரட் அம்மாளுக்கு அறிவிக்க
குழந்தை இயேசு அருள் கூர்ந்தார். பக்தியோடு இதை செபிப்போருக்குத் தனிப்பட்ட வரங்களை, சிறப்பாக கற்பு,
தூய்மை என்ற வரங்களை, அளிப்பதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.
அன்புள்ள பெற்றோரே! உங்கள்
பிள்ளைகளின் ஞானஸ்நானத் தூய்மையைக் களங்கமின்றி காப்பாற்ற விரும்புகிறீர்களா? இப்பக்திப் பழக்கத்தை
அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். குழந்தை இயேசுவைத் தங்கள் முன் மாதிரியாகக் கொண்டு, அவரை நேசிக்கவும்,
பின்பற்றவும் இச் செபமாலை பக்தி அவர்களுக்கு சிறந்த சாதனம் என்பதை உணரச் செய்யுங்கள்.
ஆண்டவரே இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
ஆண்டவரே இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வானகத் தந்தையாகிய இறைவா.
உலகை மீட்ட மகனாகிய இறைவா.
தூய ஆவியாகிய இறைவா.
அற்புத குழந்தையாகிய இயேசுவே.
வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே.
எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே.
எங்களுக்கு உதவிட என்றும் விரைந்து வரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே.
வாழ்க்கையின் முடிவுக்கும் கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே.
உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஒட்டும் குழந்தை இயேசுவே.
எங்கள் வறுமையை ஒழிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே.
துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே.
உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே.
எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே.
தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே.
உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே.
நரகத்தை. வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே.
எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே.
உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுடைய குழந்தை இயேசுவே.
ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே.
எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே.
பக்தர்களின் உள்ளங்களை மகிழச் செய்யும் இனிய புனித பெயருடைய குழந்தை இயேசுவே.
உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே.
கருணை கூர்ந்து.
கருணை கூர்ந்து.
எல்லாத் தீமையிலுமிருந்து.
எல்லாப் பாவத்திலுமிருந்து.
அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவநம்பிக்கையிலுமிருந்து.
அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லாச் சந்தேகத்திலுமிருந்து.
உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து.
எல்லாத் தீமையிலும் கேட்டிலுமிருந்து.
உமது கன்னித் தாய் தூயமரியாள், வளர்ப்பு தந்தை தூய சூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக.
எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
உமது திருக்குழந்தைப் பருவத்தின்பால் எங்களுக்குள்ள அன்பையும் பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறக்காதிருக்க வேண்டுமென்று.
உமது திரு இருதய அன்பால் எங்கள் உள்ளங்களை மென்மேலும் பற்றி எரியச் செய்ய வேண்டும் என்று.
நம்பிக்கையோடு உம்மைமக் கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டும் என்று.
எங்கள் நாடு அமைதியிலே நிலைத்திருக்க அருள்தர வேண்டும் என்று.
எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டும் என்று.
உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று.
பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்குத் தீர்ப்பிட வேண்டும் என்று.
உமது அற்புத திருஉருவிலே எங்கள் ஆறுதலாக, அடைக்கலமாக நீர் இருக்க வேண்டும் என்று.
இறைமகனே, மரிமகனே, இயேசுவே.
உலகின் பாவங்களைப் போக்கும். சர்வேசுரனுடைய செம்மறியே.
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே.
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே.
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளு
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்கள் மேல் இரக்கமாயிரும
எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே
எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே
எங்களை மீட்டருளும் இயேசுவே
எங்களை மீட்டருளும் இயேசுவே
எங்களை மீட்டருளும் இயேசுவே
எங்களை மீட்டருளும் இயேசுவே
எங்களை மீட்டருளும் இயேசுவே
எங்களை மீட்டருளும் இயேசுவே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
உம்மை மன்றாடுகிறோம்
எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே
மன்றாட்டைக் கேட்டருளும் இயேசுவே
எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவே
செபிப்போமாக:
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக் கண்களைத்
திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து,வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய
இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும்,
வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள்
மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும்,
தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்.
கனிவு நிறைந்த குழந்தை இயேசுவே! என்மேல் நீர் பொழிந்தருளிய எல்லா நன்மைகளுக்காகவும் முழந்தாளிட்டு உமக்கு மனம் நிறைந்த என் நன்றியைச் செலுத்துகிறேன். உமது இரக்கத்தை நான் என்றும் போற்றிப் புகழ்வேன். நீர் ஒருவரே என் இறைவன்; என் துணைவன்; என் புரவலன் என்று பறைசாற்றுவேன் என் நம்பிக்கை எல்லாம் இனி உம்கையிலேதான். உமது இரக்கத்தையும், வல்லமையையும் எங்கும் விளம்பரம் செய்வேன். உமது பேரன்பையும், பெரும் செயல்களையும் எல்லோரும் ஏற்றுப் போற்றுவார்களாக. குழந்தை இயேசுவின் பக்தி மக்கள் உள்ளங்களில் எல்லாம். அதிகமதிகமாகப் பரவுவதாக, உமது உதவியைப் பெற்று மகிழும் அனைவரும் உமது குழந்தைப் பருவத்திற்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்களாக, என்றென்றும் அவர்கள் உம்மைப் போற்றி மகிமைப் படுத்துவார்களாக.
இனிய குழந்தை இயேசுவே! உமது குழந்தைப் பருவத்தின் பேருண்மைகளை வியந்து, உம்மை ஆராதிக்கிறேன்; உம்மை அன்பு செய்கிறேன்; உம்மை மகிமைப் படுத்துகிறேன்; என்மீது கொண்ட அன்பால் எனக்காக நீர் ஒரு சிறு குழந்தையாக பிறந்தீர். எனவே உமக்கு நன்றி கூறுகிறேன். அந்த அன்புக்குப் பதில் அன்பாக என்னை முழுதும் உமக்குக் கையளித்துக் காணிக்கை ஆக்குகிறேன். இப்பொழுதும், என் வாழ் நாள் முழுவதும் உம் திருக்குழந்தைப் பருவத்தின் புண்ணியங்களை எனக்கு அளிக்குமாறு உம்மை இறைஞ்சிக் கேட்கிறேன். அன்புள்ள இயேசுவே! உமது தாழ்ச்சியையும், பிறன்பையயும், கீழ்ப்படிதலையும், எளிமையையும் எனக்குத் தந்தருளும், உம்மை அன்பு செய்யவும், உம்மை பின்பற்றி நடக்கவும் வானகத்தில் உமது தெய்வீகத்தைக் கண்டுகளிக்கவும் உமது அருள் எனக்குத் துணைநிற்பதாக. ஆமென்
இனிய இயேசுவே! மக்களிடையே வாழ்வதும், அவர்கள்மேல் உமது ஆசியை ஏராளமாகப் பொழிவதும்
உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்பிக்கையோடு உம்மை நாடிவந்த பக்தர் அநேகர் வியப்புக்குரிய
வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர், அவர்கள் கோரிய மனறாட்டுகளையும் அடைந்துள்ளனர்.
உமது அற்புத திருவுருவத்திற்கு முன் முழந்தாளிட்டு, என் இதயத்தை திறந்து, அதன் விண்ணப்பங்களையும்,
கோரிக்கைகளையும், ஏக்கங்களையும்,
(உன் தேவையை இங்கே குறிப்பிடுக)
உமக்குப் படைக்கிறேன். உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும். உமது ஞானத்திற்கும்,
அன்பிற்கும் ஏற்ப, என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என நான் அறிவேன்.
இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து மகிழ்ச்சியையும் தந்து கிருபையளிக்க வேண்டும்
என்று குழந்தை இயேசுவே, உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்
இரக்கமுள்ள குழந்தை இயேசுவே! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும், இவ்வுலகிலே
நீர் வாழ்ந்தபோது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும்,
உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர். இன்று இந்த விவேக் நகரிலுள்ள உமது திரு உருவத்தை
நாடிவரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான, படுமோசமான நோய்களிலிருந்து உம்மால் தான்
அற்புதமாகக் குணமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். குழந்தை இயேசுவே! நான் ஒரு பாவி; துன்பங்களை
அனுபவிக்க வேண்டியவன்; உமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்குத் தெரியும்.
இருப்பினும் எண்ணற்ற வரங்களையும், நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும், மாபெரும் பாவிகளுக்குக்
கூட நீர் மனம் இரங்கி அளித்து வருகின்றீர். ஆகையால் என்னையும் நீர் குணமாக்க முடியும் என்று இன்னும்
அதிகமாக நான் நம்புகிறேன். வானக மருத்துவரே! இந்த நோயினின்று
(நோயை குறிப்பிடுக)
நான் குணமடைய வேண்டும் என்பது உமது திருவுளமாயின் உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும்,
எல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும். அக்குணத்திற்குக் காரணம் மருந்தல்ல,
எல்லாம் வல்ல உமது தெய்வீக ஆற்றல் ஒன்றே என்பது எல்லோருக்கும் புலனாக வேண்டும்.
ஆயினும், ஆய்ந்தறியமுடியா உமது ஞானத்திற்கேற்ப் உமது சித்தம் வேறாக இருப்பின், அப்படியே ஆகட்டும்.
ஆன்ம நலனையாகிலும் அடியேனுக்கு அளித்தருளும். இந்நோயால் நான் துன்புறுகையில், உமது ஆறுதலின் இனிய
அமுதம் என்மேல் வழிந்தோட்டடும், இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை
என் உள்ளத்தை நீரப்பட்டும்.
அன்பும் இரக்கமும் உள்ள குழந்தை இயேசுவே! துன்பங்களைத் திடமனதுடன் சகித்துக் கொள்ளவும்,
உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம் தாரும். என் துன்பங்களிலே உம்மைப்
போலவே நானும் இருக்க, ஓ! இயேசுவே, என்னை ஆசீர்வதியும் நோயால் படுக்கையாகிவிட்டாலும்,
நித்திய வாழ்வை நீர் எனக்கு வழங்கும்வரை, உமது பேரன்பை நான் போற்றிப் புகழ அருள்தாரும். ஆமென்.
தூய குழந்தை இயேசுவே! 'இத்திரு இதயத்திலிருந்து பெற்றுக்கொள்
(உன் தேவையை இங்கே குறிப்பிடுக)
என் குழந்தைப் பருவத்தின் பலனாக நீ விரும்புவதை எல்லாம் கேள். கேட்டது எதுவுமே
உனக்கு மறுக்கப்படாது" என்று திவ்விய நற்கருணையின் தூய மார்கரெட் அம்மாளுக்கு நீர்
திருவாய் மலர்ந்த இச்சொற்களை நினைவு கூர்ந்தருளும். பாரச்சுமையால் நொறுக்கப் பட்டு
நொந்து வருந்தும் ஏழை மக்களுக்கு எவ்வளவு ஆறுதல் நிறைந்த சொற்கள் இவை! உண்மையே
உருவான உம்மில் முழு நம்பிக்கை கொண்டு எங்கள் துயரையெல்லாம் உமக்குத் தெரிவிக்கிறோம்.
தூயவர்களாக நாங்கள் வாழ்ந்து முடிவில்லாப் பேரின்பத்தை அடைய துணைபயாரியும். உமது
மனிதபிறப்பின், குழந்தைப் பருவத்தின் அளவற்ற ஆற்றல் வழியாக எங்களுக்கு மிகமிக அவசியமான
வரங்களை அளித்தருளும்.
எங்கள் நம்பிக்கை வீண்போகாது; போகவே போகாது: நாங்கள் ஏமாறவும் மாட்டோம். எங்களை
உமக்குக் கையளிக்கிறோம். எல்லாம் வல்ல இறைவா! நீர் கொடுத்த வாக்குறுதியின் பலனாக எங்கள்
மன்றாட்டைக் கனிவாகக் கேட்டு தயவாகத் தந்தருளும்.
குறிப்பிட்ட அதே நேரத்தில், மணிக்கு ஒரு முறையாக அடுத்தடுத்து ஒன்பது முறை சொல்ல வேண்டிய செபம்
ஓ இயேசுவே!''கேளுங்கள் பெறுவீர்கள், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறந்து கொள்ளும்'' என்று மொழிந்தீரே, உமது திருத்தாயார் தூய மரியாளின் பரிந்துரை வழியாக நான் தட்டுகிறேன், தேடுகிறேன், கேட்கிறேன். நான் கோரும் இவ்வரத்தை (நீ கோரும் வரத்தை இங்கே குறிப்பிடுக) கொடுத்தருளுமாறு கேட்கிறேன்.
ஓ இயேசுவே! ''என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்" என மொழிந்தீரே, உமது திருத்தாயார் தூய மரியாளின் பரிந்துரை வழியாக என் அவசர மன்றாட்டை (நீ கோரும் வரத்தை இங்கே குறிப்பிடுக) அளித்தருளுமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் உம் தந்தையை இறைஞ்சி கேட்கிறேன்.
ஓ இயேசுவே! "விண்ணும், மண்ணும் அழிந்து போகும்; ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா", என்று மொழிந்தீரே, உமது திருத்தாயார் தூய மரியாளின் பரிந்துரை வழியாக என் செபம் பலிக்குமென நான் உறுதியாக நம்புகின்றேன்.