CHURCH
Nullam dignissim, ante scelerisque the is euismod fermentum odio sem semper the is erat, a feugiat leo urna eget eros. Duis Aenean a imperdiet risus.
விவேக்நகர் அற்புத குழந்தை இயேசுவின் திருத்தல
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் திரு இருதய பங்கு மிகப்பெரிய பங்காக பரந்து விரிந்து கிடந்தது, சொன்னனஹல்லி
(இன்றைய விவேக்நகர்) வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின்டவுன், சுற்றுபுரம், ஆனைபாளையம், ஈஜிபுரா முதலியவை
இப்பங்கின் சிலபகுதிகள் தூரதுரமாகச் சிதறிக் கிடந்ததால் அங்கே ஆன்ம பணி ஆற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அன்றைய
பங்குத் தந்தை உணர்ந்தார். ஆகவே, உடனடியாக இப்பெரியப்பங்கைப் பிரித்து, புதியதொரு பங்கை உருவாக்க திட்டம் வகுத்தார்.
ஏற்றதோர் இடம் தேடி அலைந்தார், இடம் கிடைக்கவில்லை. ஆயினும் முயற்சியை அவர் கைவிடவில்லை. பிரேகு குழந்தை
இயேசுவிடம் வேண்டினால் கண்டிப்பாக காரியம் கைகூடும் என்ற நல்லாலோசனையை ஏற்று, அவ்வாறே உருக்கமாக வேண்டிக்
கொண்டார். மிக அற்புதமான முறையிலே அவருடைய செபம் வெற்றி கொண்டது. சொன்னனஹல்லியில் (விவேக்நகர்) நல்ல இடம்
கிடைத்தது. அன்றைய பெங்களூர் பேராயர் பேரருட் பெருந்தகை து, சை.லூர்துசாமி அவர்கள் 1969ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் நாள்
புதிய கோவிலுக்கு அடித்தளம் இட்டார்கள்.
அடுத்து வந்த பங்குத் தந்தை ஏறக்குறைய எடுத்திங்கள் காலமாக, இப்பகுதியலே வாழும் கத்தோலிக்க மக்களின் நலனைக்கோரி,
விவேக்நகர் நகராட்சிப் பள்ளியின் வெளியரங்கில் ஞாயிறுதோறும் திருப்பலி நிறைவேற்றி வந்தார். இப்புதிய பங்கின் முதல் பங்குத்
தந்தையாக க.பீட்டர் அடிகளார் 1971ம் ஆண்டு மே திங்களில் பதவி ஏற்றபின், புதிதாக வாங்கிய இடத்திலேயே திருப்பலி ஒப்புக்
கொடுக்க ஏற்பாடுகள் செய்தார். அதோட திரு இருதய பங்கிலிருந்த குழந்தை இயேசுவின் திருச்சுரூபத்தையும் கொண்டு வந்து
ஒரு பழைய கூடாரத்தில் நிறுவினார். இப்படி உருவான முதல் கோயில் தான் 'கூடாரக் கோயில்'. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக
இங்கு தான் குடியிருந்தார் குழந்தை இயேசு.
விவேக்நகரில் வாங்கிய இப்புதிய இடத்தை (Rose Garden) ''ரோஜா தோட்டம்' என்று பொதுமக்கள் அன்று அழைத்து வந்தனர்.
இன்றும் அவ்வாறே அழைக்கின்றனர். ஆயினும், அங்கு காட்டுச் செடிகளும், கொடிகளும், அடர்ந்த புதர்களும் அப்போது மிகுந்திருந்தன.
அவைகளுக்குள் நாகப் பாம்புகளும், மற்ற நச்சுப் பூச்சிகளும் குடியிருந்தன. விளக்குகள் கிடையாது, எனவே இரவெல்லாம் ஒரே இருட்டு,
சதுப்பு நிலமாகையால் மழைகாலத்தில் எங்கும் சேறு. போதாக்குறைக்கு கொசுக்களின் தொல்லை வேறு. இருப்பினும் இதையெல்லாம்
பொருட்படுத்தாமல் குழந்தை இயேசுவிடம் படையெடுத்து வந்தனர் பக்தர்கள்.
1974ம் ஆண்டு புதிய கோயிலைக் கட்ட அனுமதி கோரியபோது சில செல்லாக்காரணம் காட்டி பெங்களூர் நகராட்சி மறுத்துவிட்டது.
நகர முன்னேற்றக் குழுவும் தடை செய்தது.பல எதிர்ப்புகளும், சிக்கல்களும் குறுக்கே நின்றன. எனினும், அருள் பங்குதந்தை அவ
நம்பிக்கை கொள்ளாமல் கருமமே கண்ணாக கடுமையாகப் பாடுபட்டு தம்முயற்சியைத் தொடர்ந்தார். தன்னையே ஓடாக உழைத்தார்.
குழந்தை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் விடா முயற்சியும், பொறுமையும், அயரா உழைப்பும் நல்ல பலனை ஈன்றன.
முட்டுக்கட்டைகளெல்லாம் வெட்டுண்டு வீழ்ந்தன. கோயில் கட்டிட வேலை விறுவிறுப்புடன் விரைந்தது. 1979ம் ஆண்டு ஜுன் 29ம் நாளன்று,
பல்வேறு மதத்தைச்சார்ந்த பக்த பெருமக்கள் கடலென குழுமி நிற்க, உரோமை நகரிலிருந்து வருகை தந்த நற்செய்தி அறிவிப்பு பணி
பேராயத்தின் செயலர் பேரருட் பெருந்தகை து. சை. லூர்துசாமி பேராயர் அவர்கள் அழகிய இப்புதிய கோயிலை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்கள்.
இந்த அழகிய கோயிலுக்குள்ளே அலங்காரப் பீடத்தில் மட்டும் குழந்தை இயேசுவை ஏற்றிவைத்து மகிமைப் படுத்தினால் போதுமா?
நம் அனைவரின் இதய பீடத்திலும் அமர்ந்து அவர் ஆட்சிசெய்ய வழி வகுப்பதும் அவருக்கு மகிமை
தானே! "என்னை நீ மகிமை செய்யச் செய்ய, உன்னை நான் இன்னும் ஆசீர்வதிப்பேன்" என்பது அவர் திருவாய் மலர்ந்த அருள் வாக்கன்றோ!
ஆகவே, திருப்பலியில் பங்கு கொண்டு சிறந்த முறையில் அவரை மகிமைப்படுத்துவோம்
அது முடியாவிடினும் குறைந்தது வாராவாரம் வியாழனன்று நடைபெறும் நவநாள் வழிப்பாட்டிலாவது கலந்து அவரை வாழ்த்தி
வணங்குவோம். அத்தோடு ஆண்டுதோறும் ஐனவரி 14ம் நாள் கொண்டாடப்படும் அவரின் பெருவிழாவிலும், அதற்கு ஆயத்தமாக
நடைபெறும் நவநாள் பக்தி முயற்சிகளிலும் பங்கேற்று பலன் பெறுவோம். உங்கள் இல்லங்களிலே, உள்ளங்களிலே குழந்தை
இயேசுவை குடியேற்றி மகிமைப் படுத்துங்கள். எல்லையில்லா அவர் வள்ளலன்மையின் இனிமையைச் சுவைத்து மகிழ்வீர்கள்.
அற்புதக் குழந்தைக்கோர் அழகிய மண்டபம்
2ரோஜாத் தோட்டம் விவேக் நகராகி விவேக் நகர் குழந்தை இயேசு நகராக மலர்ந்து வருகிறது! கர்நாடக மாநில எல்லையைத்
தாண்டி தமிழகம், கேரளம், வடபுலத்திலுள்ள மாநிலங்கள், ஏன்! கடல் கடந்த நாடுகளிலும் புகழ்மணம் வீசுகிறார் விவேக் நகர்
குழந்தை இயேசு! கல்லைக் கனியாக்கும் கருணையால் முள்ளை மலராக்கும் அருளால் பாலையைச் சோலையாக்கும் சக்தியால்
முல்லை மலர் கொத்தாய் மகிழ்ந்து மோகனச் சிரிப்பாய் பொலிந்து மின்னலாய் ஒரு இளஞ்சிரிப்பை உதிர்த்தவாறு எல்லா தரத்து
மக்களையும் எல்லா மதத்து மாந்தரையும். கவர்ந்திழுத்து வருகின்றார் விவேக் நகர் அற்புத குழந்தை இயேசு! ரோஜாக்களின் ராஜா
தனது அரியணையை இவ் எல்லையில் நிலை நாட்டிய நன்னாள் கால் நூற்றாண்டைக் காண கடுகி விரைகிறது! வருடங்கள்
உருண்டோட திருத்தலத்தை நோக்கித் திரண்டு வரும் பக்தர் கூட்டம் எண்ணிக்கையைத் தாண்டுகிறது. எழுச்சியைத் தூண்டுகிறது!
வியாழக்கிழமை சிறப்பு வார நாட்களையும் நிரப்புகிறது. சாலைகள் அனைத்தும் விவேக் நகர் நோக்கித் திரும்புகின்றன.
சக்திமிக்க வல்ல செயல்கள் அரும்புகின்றனர் ஆலயத்தில் அரியணை கொண்டிருக்கும் அற்புதக் குழந்தை இயேசுவைக் காண
இரவுப் பகலாய் எந்நேரமும் அலை மோதும் கூட்டம் திரண்டு வருவது பரவசமூட்டும் காட்சி தான்! ஆனால் திருப்பலி நேரங்களில்
இடைவெளியின்றி அணிவகுத்து வந்த மக்களால் பலிபூசையில் பங்கேற்றோருக்கு பாதிப்பு ஏற்பட்டதும் உண்மை! அற்புதக் குழந்தை
இயேசுவின் தரிசனம் பெற வேண்டும் துயரெல்லாம் போக வேண்டும் கேட்ட வரம் கிடைக்க வேண்டும் என்ற பக்தர்களின் ஆர்வம்
மதிக்கப்பட வேண்டும் அதே சமயம்
பலிபூசையும் சத்தம் சந்தடியின்றி நிறைவேற்றப்பட வேண்டும் இவ்விரண்டையும் நிறைவேற்ற திட்டம் தீட்டப்பட்டது! அது தான்
அற்புதக் குழந்தை இயேசுவுக்கு அழகிய மணிமண்டபம் அமைப்பது! 13.11.1986 இல் அப்போதைய திருத்தல தந்தை பாலையா
அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டு, பின்வந்த திருத்தலத் தந்தை பெலிக்ஸ் அலாய்சியஸ் பிண்டோ அவர்களால் கவின் சிந்தும்
கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டு 22.6.1989 இல் பெங்களூர் மறைமாநிலப் பேராயர் பேரருட் பெருந்தகை அல்போன்ஸ் மத்தியாஸ்
அவர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது! இம்மணி மண்டபத்தில் அலங்கார பீட முண்டு அவ்வலங்கார பீடத்தில் அற்புதக்
குழந்தை இயேசு காத்திருக்கிறார் குழந்தைச் சிரிப்பும் கோலத் திருமுகமும் கோடி சூரியன்கள் கூடி வந்து ஒளிபெருக்குவது போல் தேடி
வரும் மக்கள் யாவருக்கும் தரிசனம் தருகிறார்!
பார்ப்போரை யெல்லாம் கவர்ந்திழுக்கிறார் அண்டி வந்தவர்க்கெல்லாம் கருணை மழை பொழிகிறார்! போவோர் வருவோரையெல்லாம்
நின்று நிமிர்ந்து பார்க்க வைக்கக் கூடிய கம்பீரமான மண்டபம்! கட்டிடக் கலை நுட்பங்களைக் கொண்டு எழுப்பிய மாளிகை! வானத்தின்
நீல வண்ணத்தை இரவு பகல் எந்நேரம் மணிமண்டபத்தில் பாய்ச்சுகின்ற வகையில் நிர்மாணிக்கப்பட்ட அற்புதக் கட்டிடம் பக்தர்களுக்கு
வசதி ஏற்படுத்த வேண்டு மென்ற ஒரே நோக்கத்தில் எழுப்பப்பட்ட மண்டபம் அண்டி வருவோர்க்கு அருள் மொழியும் சந்நிதானம்!
இல்லையென்று வந்தோரல்லாம் தொல்லை இனி இல்லையென்று துதிபாடும் அருள் கோட்டை! புகலிடம் தேடி வருவோர்க்கு இது சரணாலயம்!